‘தல’ அஜித் நடித்து திரைக்கு வந்த ‘விஸ்வாசம்’ திரைப்படம் திரையுலக வரலாற்றில் பல சாதனைகளைப் படைத்துள்ளது. இப்போது லேட்டாஸ்ட் சாதனை யுடியூப்பில் செய்த சாதனைதான்!
விஸ்வாசம் திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் 100 திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. மாதம் ஒன்று கடந்த நிலையில் பொன்விழாவை நோக்கி நடைபோடுவது பெரிய விஷயமாகப் பார்க்கப் படுகிறது.
டி இமான் இசையில் உருவான விஸ்வாசம் படத்தின் பாடல்கள் அனைத்துமே யு-டியூப்பில் 100 மில்லியன் (10 கோடி) ஹிட்ஸை கடந்து விட்டது. குறிப்பாக அந்த “கண்ணான கண்ணே…” பாட்டை மட்டுமே (31 மில்லியன்) 3 கோடி பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!