பிறந்த நாள் கொண்டாடும் நடிகை திரிஷா! எத்தனையாவது பிறந்த நாள் தெரியுமா?!

சினி நியூஸ் லைஃப் ஸ்டைல்

trisha krish hbd - 2026நடிகை திரிஷா இன்று தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்திய திரையுலகில் கதாநாயகியாக நிலைத்து நின்று களமாடிக் கொண்டிருப்பவர் த்ரிஷா. இன்று இவர் தனது பிறந்த நாளையொட்டி சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்

அந்த வீடியோவில் மே 4 என்றாலே எனக்கு ஸ்பெஷல் தான்; அதுவும் இந்த ஆண்டு மிகவும் ஸ்பெஷல்!

இந்த நாளில் பரமபதம் விளையாட்டு படத்தின் ட்ரெய்லர் மற்றும் இரண்டாவது போஸ்டரை வெளியிடுகிறோம்! என் 60 வது படமான இது அரசியல் திரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ளது!

திருஞானம் எழுதி இயக்க அம்பரீஷ் இசையமைத்துள்ளார் என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்!

மிஸ் சென்னையாக கால் பதித்து, மிஸ் கோலிவுட்டாகத் திகழும் த்ரிஷாவுக்கு நம் பிறந்த நாள் வாழ்த்து!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.