வரவேற்பைப் பெற்றுள்ள வெண்பனி இரவில் … கே.ஜி.ரஞ்சித் பாடிய பாடல்!

சினி நியூஸ் லைஃப் ஸ்டைல்

venpani iravil song - 2026

சூர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் என்.ஜி.கே படத்தில் இடம்பெற்றுள்ள ‘தண்டல்காரன்’ பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் பாடலை பாடிய ரஞ்சித் தமிழ், தெலுங்கு, மலையாளம் என சுமார் 170க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

தற்போது விரைவில் ஹாரர் திரில்லராக வெளியாக உள்ள படம் ஒன்றின் பைலட் படமாக உருவாகியுள்ள படத்தில் ‘வெண்பனி இரவில்’ என்கிற பாடலை பாடியுள்ளார். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் ராஜ்தேவ் என்பவர் இயக்கியுள்ளார். இவர் பிரபல இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

விஜய் ஆண்டனி நடித்த காளி படத்திற்கு பாடல் எழுதிய தமிழணங்கு தான் இந்தப் பாடலை எழுதியுள்ளார். இதற்கு ஜுபின் இசை அமைத்துள்ளார். இவர் பழைய வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட ஐந்து படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.