சென்னை:
தமிழக சபாநாயகரின் நடவடிக்கையை எதிர்த்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18பேர் சார்பில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு வரும் 20 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
முன்னதாக, தகுதி நீக்கத்தை தடுத்து நிறுத்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். இந்தக் கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் அறிவுரை அளித்ததை அடுத்து அவர்கள் மனு தாக்கல் செய்தனர்.



