சென்னை:
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, 18 தொகுதிகளும் காலியாக இருப்பதாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு இன்று மாலைக்குள் அரசிதழில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. அரசிதழில் வெளியிடப்படும் பட்சத்தில், இது மிகப் பெரும் முடிவாக தமிழக அரசியல் வட்டாரத்தில் கருதப் படுகிறது.



