அநேகமாக கமல்ஹாசனின் தீவிர அரசியலால், ஒரு நடிகையின் பாடு படு திண்டாட்டமாகியிருக்கிறதாம். கமலுக்காக கால்ஷீட் கொடுத்து கடும் கஷ்டத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறார் காஜல் அகர்வால் என்கிறார்கள்.
ஜெயம் ரவியுடன் கோமாளி படத்தில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். கமலுடன் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார். ஆனால் இந்தியன் 2 படம் இன்னும் கிடப்பிலேயே உள்ளது
இந்தியன் பாகம் 2 படம் தொடங்குவதற்கான அறிகுறி இன்னும் தெரியவில்லை! இந்தப் படத்துக்காக ஒதுக்கிய தேதிகள் வீணாகிப் போனதால் கடும் மன வருத்தத்தில் உள்ளார் காஜல் அகர்வால்!
இந்நிலையில் இந்தியன்-2 படத்திலிருந்து விலகிக் கொள்ளலாம் என்று அவர் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது!



