கவுண்டியில் அசத்திய அஸ்வின்: ஒரு டெஸ்ட்; 12 விக்கெட்; ஒரு அரை சதம்!

லைஃப் ஸ்டைல் விளையாட்டு

countymatch - 2026

இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், கவுண்டி மேட்ச்சில் கலக்கலாக ஆடி வருகிறார். இவர் ஒரு டெஸ்ட் மேட்சின் இரு இன்னிங்ஸில் 12 விக்கெட்டும் ஒரு அரை சதமும் அடித்து அசத்தியுள்ளார்.

முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின், இந்திய அணியின் டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து விளையாடுகிறார். ஆனால், ஒருநாள் போட்டியில் சரியான அளவில் இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில், இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார் அஸ்வின்.

இங்கிலாந்தின் நாட்டிங்காம்ஷைர் அணிக்காக விளையாடி வரும் அஸ்வின் சர்ரே அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் 69 ரன்கள் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். 2-வது இன்னிங்சில் 75 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து, 2-வது இன்னிங்சில் அரை சதமும் அடித்தார். நாட்டிங்காம்ஷைர் அணியில் இரண்டாவது இன்னிங்க்ஸில் அதிக ரன் சேர்த்தவர் அஸ்வின்தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.