நேபாளத்தில் உயிரிழந்த ராமச்சந்திரன் உடலை கொண்டுவர அனைத்து ஏ்றபாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நேபாளத்தில் உள்ள தமிழக பக்தர்களை மீட்டு வர தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார். மேலும், நேபாளத்தில் வானிலை மோசமாக இருந்தாலும் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என கூறியுள்ளார்.
கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு இந்தியா முழுவதிலும் இருந்து 1300 பக்தர்கள் சென்றிருந்தனர். இந்நிலையில் நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழையும் கடுமையான பனிப்பொழிவும் நிலவி வருகிறது. பலத்த மழை காரணமாக நேபாளத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் பக்தர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
யாத்திரை சென்ற பக்தர்களில் 300 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். நேபாளத்தில் சிக்கித் தவித்த இந்திய யாத்ரீகர்களில் முதல் கட்டமாக 104 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தகது.



