சென்னை மாவட்டம் வடசென்னை பகுதி, தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் சார்பில், பள்ளி இறுதித் தேர்வில் சாதனை புரிந்த 150 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் முதல்வன் விழா மற்றும் கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில், தமிழ் ஆட்சி பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மாணவர்களை வாழ்த்தியதுடன் அனைத்து சமூகத்தினருக்கும் வேறுபாடு பார்க்காமல் விருது வழங்கும் மாவட்ட தலைவர் வரதராஜனை பாராட்டினார்.
ஜூலை 7 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு சென்னை கொளத்தூர் எவர்வின் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிராமணர் சங்க சென்னை மாவட்ட தலைவர் டி.வரதராஜன் தலைமை தாங்க, சிறப்பு அழைப்பாளர்களாக மாநிலத் தலைவர் பம்மல் ராமகிருஷ்ணன், அமைச்சர் டாக்டர் பி. வேணுகோபால் எம்.பி., டாக்டர் பி. புருஷோத்தமன் (தாளாளர் எவர்வின் பள்ளி குழுமம்) டாக்டர் பரமேஸ்வரன், சரவணன், சுந்தரமூர்த்தி, ஸ்ரீமதி விஜயா வடபழனி பி.ஆர். கிருஷ்ணராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
பொதுச் செயலர் விஜயகுமார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க மீனாட்சி, ரேணுகா ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். கிளையின் இரு குடும்பங்களுக்கு கல்வி நிதி உதவி தலா ரூ. 5ஆயிரம் வழங்கப் பட்டது. மாணவர்களுக்கு உதவி நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்த ஸ்வாமிநாதன், ஸ்ரீராம், ஜானகிராமன், வசந்த் மீரா, நித்யா மற்றும் சிற்றுண்டி அளித்த ஸ்ரீராமசாமி, ஸ்ரீனிவாசன் ஆகியோருக்கு நிகழ்ச்சியில் நன்றி தெரிவிக்கப் பட்டது.





