தென்னகத்து மங்கையின் சொற்களில் குடியேறிய ஹிந்தி!

hindi diwas jayashree - 2026
  • ஜெயஸ்ரீ எம்.சாரி, நாந்தேட்.

காவிரிப்படுகையான மாயவரத்தில் தேசிய துவக்கப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது வகுப்புகள் முடிந்தவுடன் பள்ளி வளாகத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த ‘ப்ரைவெட்’ ஹிந்தி வகுப்பில் ஹிந்தி கற்றுக் கொண்டேன்.

ஹிந்தியில் ‘ப்ராத்மிக்’ மற்றும் ‘மத்யமா’ தேர்வுகளை இரண்டாம் வகுப்பில் எப்படியோ தேர்ச்சிப் பெற்று ராஷ்ட்ரபாஷாவில் நுழைந்தேன். தேர்வுக்கு பணம் கட்டியவுடன் தான் ‘ மௌகிக்’ ( வைவா) என்னும் விஷயமும் அதில் இருந்தது, புரிந்தது. அந்த வயதில் ‘விவா, பூஸ்ட்’ குடித்தே வளர்ந்ததால் ‘வைவா’ பற்றி அறியவில்லை. அதனால் முறையாக ஹிந்தி கற்றுக் கொள்ள முடியாமல் நிறுத்தி விட்டேன்.

பின்னர், தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் உபயோகத்தில் ‘ ருகாவட் கேலியே கேத் ஹை’ ( தடங்கலுக்கு வருந்துகிறோம்), ‘பானி கா மோல் பஹசானியே’ (நீரின் அருமையை உணருங்கள்) போன்ற வாக்கியங்களினால் மீண்டும் என் ஹிந்தி உயிர்ப்பிக்கப்பட்டது. பல ஜுனூன் தமிழில் வந்த சீரியல்களின் தாக்கத்தினால் அவைகளின் ஹிந்தி மூலத்தை அறிய நான் ஹிந்தியிலும் சிறிது காலம் பார்த்ததால் ஹிந்தியும் கொஞ்சம் புரிய துவங்கியது.

என் திருமணத்திற்கு பிறகு என் குடும்ப ராஜ்யத்தின் பாஷையாக மராட்டியும், வெளிவட்டார பாஷையாக ஹிந்தியும் இருக்கின்றது. இன்றும் நான் பேசும் ஹிந்தியை கேட்பவர்கள், ” நீங்கள் மதராஸியா?” எனக் கேட்க தயங்குவதில்லை. இன்னும் ஒரு சிலர், ” உங்களுடைய திருமணம் காதல் திருமணமா? உங்கள் கணவர் நன்றாக மராட்டியே பேசுகிறார், உங்களுக்கு ஹிந்தி கூட தாளம் போடுகிறது!”, என்று சூசகமாக கூறும் போது ” ஆம்! காதலுக்கு கண்ணோடு சேர்ந்து மொழியும் இல்லை,” என்று சொல்ல நினைப்பேன், என் செய்வது! ஒரு புன்னகையே பதிலாக கொடுத்து விடுகிறேன்.

இவ்வாறான சூழ்நிலைகளை எதிர்கொண்டு வருவதனால் 2017- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ஆம் தேதி ஹிந்தி தினத்தை முன்னிட்டு கீழ்வரும் வரிகளை எழுதினேன்…

ஹிந்தியே…
இன்று உன்னை நான் பேசும்போது…
நீங்கள் தென்னிந்தியரா?
என்று வினவுபவர்களே….

ஒரு நாள் தென்னகத்து
மங்கையின் சொற்களில்
குடியேறிய ஹிந்தி மொழி என
உனக்கும் அடையாளம் தரும் நாள்
வெகு தொலைவில் இல்லை என …

ஹிந்தி தினத்தன்று
சபதம் ஏற்கிறேன்.

ஆனால், வேறு வழியில்லை, ஹிந்தியும் வரவில்லை, தமிழும் போச்சு
இதே மாதிரி எழுதி மனதை சமாதானப் படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.

இதற்கிடையில் ஹைதராபாத் கேந்திரிய ஹிந்தி சன்ஸ்தான் நடத்திய ‘தென்னிந்திய நாட்டுப்புற காவியங்களில் தேசிய உணர்வு’ என்ற தலைப்பில் தேசிய அளவிலான நடந்த கருத்தரங்கில் நான் ஹிந்தியில் என்னுடைய கவிதையை படிக்கும் வாய்ப்பு எனக்கு வழங்கப் பட்டது. எனக்கு ஹிந்தியில் கவிதை எழுத வருமா என ஒரு சந்தேகம் வந்தது. என் கணவரும், என் இரண்டு பையன்களும் எனக்கு உற்சாகப் படுத்தினர்.

முதலில் நான் தமிழில் கவிதையை எழுதினேன். பின்னர், அதை ஹிந்தியில் எழுதி நான்கு பேர்களிடம் என் கவிதையை காட்டி பிழைகளை திருத்திக் கொண்டேன். பின்னர், ஹைதரபாத் சென்று என் ஹிந்தி கவிதையை வாசிக்க, அந்த சபையில் கூடியிருந்தோரும் என் கவிதையை ரசித்து மகிழ்ந்தனர். அத்தருணம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது.

‘தமிழ்’ என்னும் மூன்றெழுத்து உயிர் நாடியாகவும், ‘ஹிந்தி’ என்னும் மூன்றெழுத்து என் தற்போதைய வாழ்வியலுக்கு அடித்தளமாகவும் இருக்கிறது என்பதே உண்மை.

வாழ்க நம் தமிழ் மொழி!! வாழ்க நம் நாட்டில் தோன்றிய ஹிந்தி மொழியும்!!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories