மண்ணில் தெரியுது வானம்- நாவல் மறுபதிப்பு வெளியீட்டு நிகழ்ச்சி

சென்னை:

எழுத்தாளர் சிதம்பர சுப்ரமணியம் எழுதிய மண்ணில் தெரியுது வானம் நாவலின் மறுபதிப்பு வெளியீட்டு விழா ஞாயிற்றுக் கிழமை சென்னை மயிலாப்பூர் பி.எஸ்.உயர்நிலைப்பள்ளி வளாக அரங்கில் நடைபெற்றது.
ந.சி.சு அறக்கட்டளை சார்பில் ந.சிதம்பர சுப்ரமணியம் எழுதிய மண்ணில் தெரியுது வானம் என்ற இந்த நாவலின் மறுபதிப்பை எழுத்தாளர் அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் வெளியிட, எழுத்தாளர் சாரு நிவேதிதா பெற்றுக் கொண்டார். தீபம் இதழின் பொறுப்பாசிரியர் செங்கோட்டைஸ்ரீராம், சென்னை வானொலி முன்னாள் இயக்குனர் விஜய திருவேங்கடம் ஆகியோர் நாவலைக் குறித்து தகவல்களைப் பகிர்ந்து கொண்டு, வாழ்த்துரை வழங்கினர்.

 

ந.சி.சு குடும்பத்தினர் சார்பில் நடேசன், கிருஷ்ணன், சுந்தரம், தியாகராஜன், திருமதி பாலா, வத்சலா, கிரிஜா, உஷா, சாரதா ஆகியோருடன் வாசக அன்பர்கள் பலர் கலந்து கொண்னர். சுந்தரம் நன்றி கூறினார்

தேவருலகான வானகத்து ராம ராஜ்யத்தை மண்ணுலகில் நிலவச் செய்த ராமனின் ஆட்சியைப் போன்று தனது கிராம ராஜ்யக் கனவை இந்த மண்ணில் பரப்ப எண்ணிய காந்திஜியின் கால ஓட்டத்துடனே செல்லும் நாவல் இந்த மண்ணில் தெரியுது வானம்.

தகவல்: வல்லிபுரம் சுபாஷ் சந்திரன்

 

 

ந.சி.சு அறக்கட்டளை சார்பில் ந.சிதம்பர சுப்ரமணியம் எழுதிய மண்ணில் தெரியுது வானம் என்ற நூலினை மறுபதிப்பு செய்து வெ…

Posted by Subashchandran Vallipuram on Sunday, January 10, 2016