விடுதி ஆட்டம் முடிஞ்சி போச்சு!

விடுதி யாட்டம் முடிஞ்சு போச்சு
விடியப் போகுது மச்சான் – உன்னை
ரெண்டு வாரம் அடைச்சு வச்சுப்
பூட்டு போட்டு வச்சான்

சடுதியா நீ சட்டை வேட்டி
மாட்டிக்கிட்டு முன்னே – சட்ட
சபைக்குப் போயுன் தன்மா னத்தை
மீட்க வேணும் அண்ணே

மக்களுக்குத் துரோகம் செஞ்சா
மன்னிக்கவே மாட்டோம் – அட
பணத்துக் காகச் சோரம் போனா – உன்
பக்கம் திரும்ப மாட்டோம்

மானத்தையே அட மானம் வச்சு
வாழ வேணாம் மாமா – அவ
மானப்பட்டு அசிங்கப் பட்டு
ஓடி ஒளிய லாமா

ஊரு சனம் கூடி வந்து
உரக்கக் கேள்வி கேக்கும் – ஒன்
புள்ள குட்டி வாழணும் – தர்மம்
தள்ளி நின்னு பாக்கும்

(17.02.2017)

-கவிஞர் வழக்கறிஞர் கே. ரவி