குறள் – இருவரிக் கவிதை அவள் – இதழ்விரிக் கையிலே குறள் – ஈரடியால் உலகு அளக்கும் அவள் – ஈரவிழியால் உவகை அளிப்பாள் முதல் அடி – முடிச்சு இரண்டாம் அடி – இல்லறம் அடி மட்டும் இரண்டு அதன் சீர் ஏழு! முதல் சீர் – முத்தம் இரண்டாம் சீர் – இன்பம் மூன்றாம் சீர் – மூச்சுக்காற்று நான்காம் சீர் – நாணம் ஐந்தாம் சீர் – அன்பு ஆறாம் சீர் – ஆற்றுப்படுத்த ஏழாம் சீர் – எய்தும் வாழ்வு! அவள் கொண்டு வரும் சீர் இவையெனக் காத்திருந்தேன்… ஊரும் பேரும் தெரியாதுதான்! உறவும் உலகும் புரியாதுதான்! வீட்டுக் கதவைத் திறந்தே வைத்து வாசலின்மீதெ விழி வைத்திருந்தேன்..! அவள்… விளக்கேற்றி வாழ்வின் ஒளி பரப்புவாள்… முப்பாலுக்கு அப்பாலாய் என்ற ஆசையில்! தப்பாமல் அப்பால் சென்றாள் தனியனாய்த் தவிக்க விட்டே! தகிக்கும் என் ஆசைகளைத் தனலாக்கி எரித்து விட்டே!
குறளொடு புகுந்த காதல்!
Popular Categories



