(புலி வருது புலி வருது புலி வந்தே விட்டது. வாழ்த்தி வரவேற்போம்.)
தலைவா தலைவா கோஷமினி
எங்கும் ஒலிக்கட்டும்
சினிமா வீரம் நெசமாவே
- தமிழ்
நாட்டை வெல்லட்டும்
நூறு அடி உசரம் கட் அவுட்டு
நூறு கொடம் பால் நீ கொட்டு
சரவெடி கொளுத்து டான்ஸ் ஆடு
விசிலடி தலைவர் புகழ் பாடு
(தலைவா தலைவா )
ஊழல ஒழிக்கக் குரலெழுப்பு
ஊதுற சங்கை ஊதி விடு
ஏழைகள் எல்லாம் தோழர்கள் என்று
உணர்ச்சி வசனம் வீசி விடு
(தலைவா தலைவா )
அம்மா இல்லே அப்பா இல்லை
யாருக்கும் பயப்படத் தேவையில்லே
சும்மா நடத்து நாடகத்தை
யோசிப்பதற்கு நேரமில்லே
ரசிகா இனியுன் ராஜ்ஜியமே
- நல்ல
ஆட்சியை நீயே உருவாக்கு
-நான்
பாட்டுக் கெதையோ பாடிடுவேன்
கிடக்கேன் நானொரு பொறம்போக்கு
கவிதை பாடல்: வழக்கறிஞர் ரவி
31-12- 2017



