நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்தார் அவருடைய அறிவிப்புக்கு மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்… இதோ…
*கட்சி, கொள்கை குறித்து எதுவும் அவர் கூறவில்லை. அதனை அறிவித்தபிறகு இந்திய கம்யூனிஸ்டு கட்சி தெரிவிக்கும். தற்போது ஆட்சி குறித்து ரஜினி கருத்து தெரிவித்து இருப்பது வரவேற்கதக்கது
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்
ரஜினி அரசியல் அறிவிப்பு – ஜி.கே.வாசன் வரவேற்பு…
*நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது
– தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன்
*அரசியல் பிரவேசத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்த ரஜினிகாந்திற்கு வாழ்த்துகள்:
- பாரிவேந்தர்
*ரஜினி கூறியது போல் தமிழகத்திற்கு எந்த தலைகுனிவும் ஏற்படவில்லை
- அதிமுக எம்.பி. அன்வர்ராஜா
ரஜினியின் அரசியல் அறிவிப்பு – மு.க.அழகிரி வரவேற்பு…
நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வாழ்த்தி வரவேற்கிறேன்
– திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி
மதவாத அரசியலாக இல்லாமல், ஆன்மீக அரசியலாக இருக்கும் என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.
ரஜினிகாந்தின் அரசியல் வருகையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது
-திருமாவளவன்
*சட்டமன்ற தேர்தலின் போது கட்சி ஆரம்பிப்பேன் என ரஜினிகாந்த் கூறியுள்ளார்; இதனை பார்க்கும்போது அவர் இன்னும் முழு அரசியலுக்கு வரவில்லை என்றே தோன்றுகிறது:
– இ.,கம்யூ மாநில செயலாளர் முத்தரசன்
*ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்
- திமுக எம்.பி. திருச்சி சிவா..



