உங்களுக்கு தூக்கம் வரவில்லையா? அப்படி என்றால் இதைச் செய்யுங்கள்!

Published:

தூக்கம் வரவில்லையா – எளிய மருத்துவம்–இய‌ற்கை வைத்தியம்

நம்மில் அநேகர் சரியான தூக்கம் இல்லாமல் அவதி படுகிறோம்

. அப்படி சரியான தூக்கம் வராமல் அவதி படுபவர்கள் கீழ்க்கண்ட எளிய மருத்துவத்தை உபயோகித்து பார்க்கலாமே

இரவில் உணவருந்திய பின் ஒரு தேக்கரண்டி தேன் சாப்பிடுங்கள் . நிம்மதியாக தூங்கலாம் .

வெங்காயத்தை நெய் விட்டு வதக்கி சாதத்தோடு பிசைந்து சாப்பிட தூக்கம் இல்லாமல் துன்பப்படும் நோய் குணமாகும் . நரம்புகளுக்கு நல்ல வலு கிடைக்கும்.

இரவில் தூக்கம் வரவில்லை என்றால் , கசகசாவை தூள் செய்து வைத்து கொண்டு படுக்க போகும் போது அதை பாலில் கலந்து சாப்பிடுங்கள் . சுகமான தூக்கம் வரும்
.
இரவில் தூங்கும் முன் சூடான பசும்பாலில் தேன் கலந்து குடித்தால் நல்ல தூக்கம் வரும் . நியாபக சக்தி பெருகும்
.
தூங்கும் போது கண்டபடி தூங்க கூடாது . பொதுவாக வலக்கை பழக்கமுள்ளவர்கள் இடப்புறமாகவும் , இடக்கை பழக்கமுள்ளவர்கள் வலது புறமாகவும் திரும்பி படுக்க வேண்டும்.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

எந்த கரங்களுக்கு வேலை மிகுதியோ அந்த கரம் மேலே இருக்கும் படி படுத்து தூங்கினால் தான் சரியான ஒய்வு கிடைக்கும் .

இரவில் படுக்கும் முன் இரண்டு கால்களையும் நன்றாக அழுத்தி தேய்த்து விடுங்கள் . நல்ல தூக்கம் வரும் . புத்துணர்ச்சியும் கிடைக்கும்

Related articles

Recent articles

spot_img