செங்கோட்டையில் மே-9ல் சமஷ்டி உபநயனம்; விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம்!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் நெல்லை பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

sengottaipoonal - 2026

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடமும், ஸ்ரீபாரதீ தீர்த்த வேத பாடசாலையும் இணைந்து சமஸ்டி உபநயனத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.

ஸ்ரீசங்கர ஜயந்தியை முன்னிட்டு, வரும் மே 9ஆம் தேதி வடுக்களுக்கு சமஷ்டி உபநயனம் செய்விக்க ஏற்பாடாகியுள்ளது. வரும் மே 8ம் தேதி அன்று உதகசாந்தி நடைபெறும்.

இந்த சமஷ்டி உபநயனத்தில் பங்கேற்று தங்கள் குழந்தைக்கு இலவசமாக உபநயனம் செய்விக்க விரும்பும் பெற்றோர், உடனே 9840267321 / 9445928331 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என செங்கோட்டை ஸ்ரீசாரதாம்பா சாரிடபிள் டிரஸ்ட், ஸ்ரீபாரதீ தீர்த்த வேத பாடசாலையின் நிர்வாகி எம்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.