கடவுள் சிந்தனை! ஆச்சார்யாள் அருளுரை!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் ஸ்ரீசிருங்கேரி மகிமை
Bharathi theerthar 1 - 2026

நினைவு இல்லாமல் ஒரு முஹூர்த்தம் (48 நிமிடங்கள்) கழிந்து விட்டதென்றால், நம்முடைய பணத்தைத் திருடர்கள் திருடிக் கொண்டு போய்விட்டால் நாம் எவ்வளவு துக்கப்படுவோமோ அவ்வளவு துக்கப்பட வேண்டும்.

இது நாம் இருக்க வேண்டிய நிலை. “நாம் பூஜை செய்யும் சமயத்திலோ அல்லது பாராயணம் செய்யும் சமயத்திலோ நம்முடைய மனம் அதிலேயே இருக்கின்றதா? அல்லது வேறு எங்காவது யோசனை செய்கின்றதா? மனம் வேறு எங்கும் யோசனை செய்யாமல் ஈச்வரனின் விஷயத்தில் மட்டுமே ஈடுபட்டிருந்தது என்று எந்த நேரத்தை நிச்சயமான நம்பிக்கையுடன் கூறுவோமோ அந்த நேரத்தைத்தான் பகவானை நினைத்த நேரமாகக் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியும். இந்தக் கணக்கின்படி நாம் ஒரு முஹூர்த்தம்கூட ஈச்வர சிந்தனை செய்வதில்லை” என்று கூறுகிறேன். எதற்காகக் கூறுகிறேன் என்றால், ஈச்வரனை மிகவும் பக்தியுடனும் ஸ்ரத்தையுடனும் நினைத்தால் அதனுடைய பலனே தனி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.