தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். தனி கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவேன் என்று அவர் உறுதியளித்துள்ளார்.
வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பிக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். நான் அரசியலுக்கு வருவது காலத்தில் கட்டாயம் என்று அவர் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன் எனவும் ரஜினி கூறியுள்ளார். பதவி, புகழுக்காக அரசியலுக்கு வரவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
45 வயதில் என்க்கு பதவி ஆசை இல்லை, தற்போது வருமா என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
செயல் திட்டங்களை நிறைவேற்றாவிட்டால் 3 ஆண்டுகளில் ராஜினாமா செய்வேன் என்று ரஜினி கூறியுள்ளார்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் எங்கள் படையும் களத்தில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நல்லதே நினைப்போம் – நல்லதே செய்வோம் – நல்லதே நடக்கும் என்பது எங்கள் கொள்கை நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
உண்மை- உழைப்பு- உயர்வு என்பதே எங்களின் மந்திரம் என்று அவர் கூறியுள்ளார்.
News : SMS. Shankar



