கொள்ளலும் கொடுத்தலும் எள்ளலும் ஏந்தலும் அன்புடையோர் இலக்கணம்! “என்னைக் கொள்” என் அன்பே…! பல முறை பகன்றாலும் பலன் மட்டும் இல்லவே இல்லை! உதடுகள் ஒட்டாத தன்மை உயிரோட்டம் இல்லாத வெறுமை! நாவுக்கும் உதட்டுக்குமே ஒட்டுறவு இல்லையே! என்னால் மனத்தில் நிறுத்த முடியாது – என்னை! என்னாள் மனத்தில் புகுத்த முடியாது – தமிழை! என்னாழ் மனத்தில் விலக்க முடியாது – அவளை! ல-வுக்கும் ள-வுக்கும் வேறுபாடு காட்டின் லவ்வுக்கும் ளவ்வுக்கும் போகும் எண்ணம்! அட… ‘என்னைக் கொள்’ என் அன்பே! நாள்கள் நகர்ந்தாலும் நால்கல் மாறவில்லை! ல் என்றே இயம்பி என்னை இல்லாமல் ஆக்குகிறாள்… கொன்று தின்னும் சாகசமோ?
கொள்ளல் – கொல்லல்
Popular Categories



