அன்று…! தனிமைத் தவம் அன்று…! ஆரவாரம்! கூச்சல்! அமைதியின்மை! சத்தங்களினிடையே சந்தம் பழக்கினேன்… தனிமையைத் தேடி ஏங்கியது மனம். தனிமை கிடைத்தபாடில்லை! தவம் தொடங்கியபாடில்லை! இறைவனை இருத்தி இயங்க வேண்டும்! இறைஞ்சிக் கிடந்தே இருக்கத் தொடங்கினேன்! ஆனாலும்… தனிமை கிட்டிய பாடில்லை! தவமும் முட்டிய பாடில்லை! இன்று..! செல்லரிக்கும் தனிமைதான்! அமைதி தவழும் பூக்காடு மனசு மரத்துவிட்ட மயானத் தோற்றம்! தனிமை தவிர்க்க தவியாய்த் தவித்தேன்! ஆரவாரத்தை நோக்கி அலைந்தது மனம்! நன்றாய்த்தான் முகம் காட்டினாள்! நாள்கள் சிலநூறு கடந்து விட்டது! நாணமும் சிலநாளில் நகர்ந்து விட்டது! அவள்… நன்றாய்த்தான் முகம் காட்டினாள்! நாணலாய் நானும் வளைந்து கொடுத்தேன்! அன்பை போதிக்கும் ‘டீச்சர்’ என எண்ணி..! ஆனாலும்… ஒவ்வொரு நொடியும் ‘டார்ச்சர்’ தான்! சிந்தையில் புகுந்து துவம்சம் செய்கிறாள்! நான் செய்த குற்றம்… இதயவாசல் கதவு திறந்து இருத்தி வைத்தேன் உள்ளுக்குள்! எனக்கான தண்டனை..! தனிமைச் சிறையில் கைதியானேன்..! நாட்கள்தான் நகர்கின்றன… சிறைமீட்க வருவாளோ..? சிந்தையை மீட்டுத் தருவாளோ…?
சிறை மீட்க வாராயோ..?
Popular Categories



