முக் கண்ணனைப் போற்றும் சிவ பிரதோஷம்!

Published:

pradosham 1 e1536323986258 - 2026

ஆதிசேஷன் வம்சத்து ஆலகாலம் உண்டாய்

அமிர்தம்தான் எல்லோர்க்கும் ஆசியுடன் தந்தாய் !

நாதியிலா பக்தையிடம் நாடிப்போய் நின்றாய்

நல்லபிட்டு நீசுவைத்து நாநிலத்தைக் காத்தாய் !

வாதிடவே செய்தங்கு வன்தொண்டர் நட்பை

வசமாக்கிச் சுந்தரமாய் நீபாட வைத்தாய் !

ஏதிதிவும் இல்லாத என்னுள்ளும் கொஞ்சம்

இன்பமுடன் நற்கவிதை எப்போது கேட்ப்பாய் ?

 

வெள்ளமென்றும் தீவறட்சி வேகமென்றும்  ஆகி

வேதனையைத் தாராமல் வேலியிட்டுக் காக்கும்

உள்ளமுனக் குண்டென்று ஊர்முழுதும் பேசி

ஓம்நமச்சி வாயவென உன்பாதம் போற்றும் !

மெள்ளமெள்ள மாணிக்க வாசகத்தில் தோய்ந்து

மேனித்தீ சூட்டினையே வெண்பனியாய் ஏற்றாய்

கள்ளனிவன் தீந்தமிழைக் கற்கண்டாய்க் கொண்டு

காலமெலாம் காப்பாய்முக் கண்ணபெரு மானே.

இன்று (07.09.2018) பிரதோஷம்)

கவிதை: மீ.விஸ்வநாதன்

Related articles

Recent articles

spot_img