பாரதி – உள்ளுக்குள் கனன்று கொண்டிருக்கும் நெருப்பாய் நீ!
பாரதி – உலகுக்குச் சொல்ல நினைக்கும் மொழியாய் நீ!
மேகக் கூட்டம் மறைத்திருக்கும் கதிரொளி நான்!
வீணர் கூட்டம் மறைத்துவைத்த விதையும் நான்!
பாரதி…
உன்தன் உற்சாகமூட்டும் உவகை மொழியாலே
ஒவ்வொரு கணமும் உயிர்ப்புடன் திகழ்கின்றேன்!
தேடிச் சோறு நிதம் தின்று – பல சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பம் மிக உழன்று – பிறர் வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவம் எய்தி – கொடுங்கூற்றுக்கு இரையெனப் பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போல -நான் வீழ்வேன் என்றே நினைத்தாயோ??




