(இன்று (02.02 .2019 ) சனிப் பிரதோஷம்)

   கவிதை: கவிஞர் மீ.விசுவநாதன்

கைலாய மலைமீது எங்கள் – வீரர்
காவலுக்கு நிற்பதனைக் கண்டேன்
மெய்மாயக் கலைஞன்நீ அங்கே – அவர்க்கு
மெய்க்காவல் செய்துவரு கின்றாய் .

பொல்லாரும் வல்லாரும் அங்கே – செயும்
போருக்கு நல்லதுணை ஆவாய்
வெல்லுகிற மாசக்தி யாக – நம்
தேசத்தின் ஏவுகணை ஆவாய் .

கார்மேகம் உன்கூந்தல் உள்ளே – குளிர்
கங்கையென இருக்கின்ற தாலே
ஊரெல்லாம் நீர்ப்பஞ்சம் நீங்க – நீதான்
ஒத்தாசை செய்திடவும் வேண்டும்

மாதேவன் பார்வேந்தன் உன்னை – தன்
மனம்வைத்தோர் கவலைகொள்வ தில்லை
ஆதாரம் உயிர்க்கெல்லாம் நீயே – என
அனுதினமும் சொல்வாக்கும் நீயே.


Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.