
வைகோவை அடுத்து ஹெச்.ராஜாவுக்கு ஒரு விபரீத ஆசை ஏற்பட்டுள்ளது. துணை முதல்வராக இருந்த ஸ்டாலின் இப்போது பட்ஜெட்டை வாசித்தால் … என்று முதல்வர் ரேஞ்சுக்கு யோசித்திருக்கிறார் ஹெச்.ராஜா.
திமுக.,வை கொள்கை ரீதியாக அவ்வப்போது விமர்சித்து, அரசியல் செய்யாத வைகோ, தனிப்பட்ட வகையில் மு.க.ஸ்டாலினை கொலைகாரன் என்று விமர்சித்து திட்டித் தீர்த்திருக்கிறார். கட்சி அல்லது கொள்கை, நடவடிக்கைகள் மீதான விமர்சனம் என்றால் இப்போது கூட்டணியின் போது அதை மாற்றியிருக்கக் கூடும். அதுவே கூட விடுதலைப் புலிகளை, ஈழத் தமிழரை கொன்றவர்கள் கருணாநிதியும் திமுக.,வினரும் என்றெல்லாம் குற்றம் சாட்டி விமர்சனம் செய்தவர் வைகோ. மானமுள்ளவன் திமுக.,வுடன் கூட்டணி வைக்கமாட்டான், இவர்களுக்கு மானம் செத்து விட்டதா என்று கேள்வி கேட்டவர் வைகோ.
ஆனால் அப்படிப்பட்ட வைகோவே, மு.க.ஸ்டாலினை ‘முதல்வர் ஸ்டாலின் அவர்களே’ என்று அழைத்து உசுப்பேற்றியிருக்கிறார் மதிமுக., பொதுச் செயலர் வைகோ. பார்க்க.. இந்த வீடியோவில்…
இப்போது, ஹெச்.ராஜா, நேற்றைய பட்ஜெட்டை ஸ்டாலின் வாசித்தால் எப்படி இருக்கும் என்று சொல்லி, சான.. சனாத… என்று கேலி செய்திருக்கிறார்.
இது குறித்து ஹெச்.ராஜா தனது டிவிட்டர் பதிவில்,
இவர் பட்ஜெட்டை படித்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பார்த்தேன். ஐயஹோ சதா சதானத்தை நினைவுக்கு வருகிறது…. என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஏற்கெனவே பட்ஜெட் குறித்து ஸ்டாலின் கருத்து தெரிவித்த போது, இது உப்பு சப்பில்லாத பட்ஜெட் என்று கூறியிருந்ததற்கு சமூக வலைத்தளங்களில் கிண்டலும் கேலியும் தூள் பறக்கின்றன. பட்ஜெட்டை வாசிச்சிப் பாருங்கய்யான்னா… நக்கிப் பாத்துருப்பாரு போலயே…! என்று கூறிவருகின்றனர்.