தமிழ்ப் பற்றுக் கொண்ட, தமிழை மும்பையில் வளர்த்த அமரர் இரா. இராகவன் அவர்கள் எழுதிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து மடலை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டு, தமிழ்த் தொண்டாற்றிய இரா. இராகவனுக்கு ஒரு இதயப்பூர்வ தமிழஞ்சலி.
நல்லதே நடக்கும்
தொல்லைகள் தொலையும்
வல்லமை பெருகும்
வளங்கள் வளரும்
கள்ளமனம் களைந்தோட
கடிந்தகுணம் மடிந்துபோக
தூய உள்ளம் கேட்போம்…
நதியென பாய்ந்தோடுவோம்
நம்பிக்கையால் மட்டும்
நம்விதி எழுதுவோம்
நல்லதை மட்டுமே
பழகுவோம்……
தீயதை மறுப்போம்
திறமைகளை வளர்ப்போம்
நாவினில் தேனைத் தருவோம்
மடமையை உடைப்போம்
மக்கள் நலம் மனதினில் கொண்டே
மக்கள் நலம் மனதினில் கொண்டே
மனிதம் காக்க
மனிதனாய் இயங்குவோம்
மனிதனாய் இயங்குவோம்
ஆன்மீகம் அடித்தலமாகட்டும்
அல்லது அன்பே
அகிலம் முழுதும்
தன்பால் சுரக்கட்டும்
பணிந்து நடப்போம்
பணியில் துணிந்து
கடப்போம்….
நலிவை மறப்போம்
தளர்வை தகர்ப்போம்
பொலிவை ஏற்போம்
புதுமை படைப்போம்
கனிவை சுரப்போம்
உண்மை தழைக்கட்டும்
உலகம் செழிக்கட்டும்
தமிழ்ப் புத்தாண்டாம்
அனைத்து நலத்தையும்
அள்ளி வழங்கட்டும்…
அள்ளி வழங்கட்டும்…
..
—-இரா.இராகவன், மும்பை.




