திருப்பூர் எம்.ஏ. சத்தார் காலமானார்

tiruppur-mla-sattarஇந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில செயலாளரும், ஈமான் தமிழ் இலக்கிய பேரவை தலைவரும் , தமிழ்நாடு ஹஜ்கமிட்டி முன்னாள் உறுப்பினருமான திருப்பூர் எம்.ஏ. சத்தர் 17.04.2015 இரவு 10.15 மணிக்கு மரணமடைந்தார். அவருக்கு வயது 73 அவரது உடல் நல்லடக்கம் 18.04.2015 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு சென்னை-21 மின்ட் மார்டன் சிட்டி 3வது பிரதான வீதி, 68ஆம் இலக்க இல்லத்திலிருந்து எடுத்து செல்லப்பட்டு பழைய வண்ணாரப்பேட்டை பெரிய மார்க்கெட் அருகில் உள்ள கபரஸ்தானில் 5 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வெளியிட்ட தகவலில் இதைத் தெரிவித்துள்ளார்.