
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய் சிவப்பு நிற காரில் வந்து வாக்களித்தார். இந்த கார் தான் தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
நடிகர் விஜய், சென்னை, நீலாங்கரையில் உள்ள 192வது வார்டுக்கு உட்பட்ட வேல்ஸ் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கினை செலுத்திவிட்டு சென்றார்.
சட்டசபை தேர்தலின் போது சைக்கிளில் வந்த விஜய், இம்முறை ரசிகர்கள் புடைசூழ காரில் வந்தார். விஜய்யின் வரவால், ஓட்டுச்சாவடியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

வரிசையில் நிற்காமல் நேராக சென்று ஓட்டும் போட்டு விட்டு. அதற்காக, வரிசையில் நின்றிருந்தவர்களிடம் மன்னிப்பு வேறு கேட்டார்.
கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின்போது நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தது பெரும் பேசுபொருளாக ஆன நிலையில், நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய் சிவப்பு நிற காரில் வந்து வாக்களித்தார். இந்த கார் தான் தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
ஏனெனில் நடிகர் விஜய் வாக்களிக்க வந்த காருக்கு இன்சுரன்ஸ் செலுத்தப்படவில்லை என்பதுதான் புது சர்ச்சையாக வெடித்துள்ளது.
நடிகர் விஜய் வந்த காரின் எண்ணை நெட்டிசன்கள் சிலர் இணையத்தில் தேடி பார்த்துள்ளனர். அப்போது அந்த காரின் உரிமையாளர் ஜோசப் விஜய் என்றும் அந்த காருக்கான இன்சூரன்ஸ் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதமே காலாவதி ஆகிவிட்டதாக குறிப்பிடப்பட்டிருந்ததாம்.

இதுகுறித்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. கோடி கோடியாய் சம்பாதிப்பவர் இன்சூரன்ஸ் கூட கட்டுவதில்லையா என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.




