
நாட்டின் தொலைதூர இடங்களில் உள்ள ராணுவ வீரர்களுக்கு மருத்துவப் பொருட்கள் வழங்க ஆளில்லா விமானம் பயன்படுத்தப்படுகின்றன.
நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள ராணுவ வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை ஆளில்லா விமானம் மூலம் அனுப்பி வைக்க இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது.
மிஷன் சஞ்சீவினியின் ஒரு பகுதியாக தொலைதூர இடங்களுக்கு மருத்துவப் பொருட்களை வழங்க ஆளில்லா விமானம் பயன்படுத்தப்படுகின்றன. அது தொடர்பான வீடியோ ஒன்றை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில், விநியோக செயல்முறை குறித்து அதிகாரிகளுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து, அதிகாரிகள் தளங்களில் உள்ள பனியை அகற்றி சுத்தம் செய்து தடுப்பூசிகள் அடங்கிய ஒரு தொகுப்பை ஆளில்லா விமானத்தில் இணைக்கப்படுகிறது.
அது நிர்ணயிக்கப்பட்ட இடத்திற்கு சென்று அங்கு காத்திருக்கும் ஒரு அதிகாரி முன்னிலையில் தொகுப்பை தரையில் இறக்குகிறது.
மேலும், தடுப்பூசிகள் விநியோகத்தின்போது தொகுப்பில் எந்த சேதமும் இல்லை என்பதையும் உறுதிப்படுத்தப்படுகிறது.




