விநாயக சதுர்த்தி; தமிழக முதல்வர் வாழ்த்து!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்
edappadi palanisamy 5 - 2026

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

அவர் தனது டிவிட்டர் பதிவில்…

ஐந்து கரத்தான் என்று அழைக்கப்படும் விநாயகப் பெருமான் அவதரித்த திருநாளான விநாயகர் சதுர்த்தியை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்

வெள்ளைக் கொம்பன் விநாயகனைத் தொழ
துள்ளியோடும் தொடர்ந்த வினைகளே
– என்பதற்கேற்ப வினைகளைக் களைந்தெறியும் தெய்வமான விநாயகப் பெருமானின் அவதார திருநாளில் மக்கள் தங்கள் இல்லங்களில் களிமண்ணால் ஆன விநாயகர் சிலையை வைத்து அருகம்புல் எருக்கம்பூ செம்பருத்தி பூ, அரளி மலர், வில்வ இலை போன்றவைகளைக் கொண்டு மாலைகள் சூட்டி கொழுக்கட்டை சுண்டல் பொரி கரும்பு பழங்கள் போன்றவற்றை விநாயகருக்கு படைத்து பக்தியுடன் வழிபட்டு விநாயகர் சதுர்த்தி திருநாளை உற்சாகமாக கொண்டாடி மகிழ்வார்கள்

வேண்டுபவர்களுக்கு வேண்டியதை அருளும் விநாயகப் பெருமானின் அவதார நாளில் வீடெங்கும் அன்பும் மகிழ்ச்சியும் நிறையட்டும் !நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும் என்று வாழ்த்தி அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்! – என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.