உற்பத்தி நிறுவனமான இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் தயாரிப்பான ரெட் லேபிள் தேயிலையை பிரபலப் படுத்த, அந்நிறுவனம் ஒன்று வெளியிட்ட அண்மைய விளம்பரம் ஒன்று சமூக ஊடகங்களில் தீப்பிடித்து எரிந்து வருகிறது.
இந்த பிராண்ட் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் தேயிலை தயாரிப்புகளில் ஒன்று என்றாலும், கணேச சதுர்த்தியின் திருவிழாவை மையமாகக் கொண்ட அதன் சமீபத்திய விளம்பரம் சிலரை ட்விட்டரில் கொதிப்படையச் செய்துள்ளது.
இந்த விளம்பரம், ஓர் இந்து தனது வீட்டிற்கு அழைத்துச் செல்ல ஒரு விநாயகர் சிலையைத் தேடுவதைக் காட்டுகிறது, ஆனால் அவர் ஒரு முஸ்லீம் மனிதர் அதை உருவாக்கியுள்ளார் என்பதை அறிந்ததும் அதை வாங்குவதற்கு தயங்குகிறார். உடனே டீ ஒன்று சொல்லி, அதைக் குடித்ததும் அவர் அந்த விநாயகர் சிலையை வாங்கிச் செல்கிறார்.
இந்த விளம்பரம் இஸ்லாமிய போபியாவை ஊக்குவிக்கிறது மற்றும் இந்துக்களை மோசமான ஊடக வெளிச்சத்தில் காட்டுகிறது என்று ட்விட்டர்வாசிகள் கொந்தளிக்கின்றனர்.
ஒரு முஸ்லீம் மனிதனிடமிருந்து எதையாவது ஒரு ஹிந்து வாங்குகிறார் என்றால், இந்த விளம்பரத்தில் காட்டப் படுவது போல் எந்த இந்து வாடிக்கையாளரும் நடந்துகொள்வதில்லை… இதனை மேற்கோள் காட்டி தேநீர் பிராண்ட் உண்மையற்றதாக சிலர் விமர்சிக்கின்றனர்.
விளம்பரதாரர்கள் விளம்பரங்களில் மதத்தை தங்கள் பொருளாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று ஒரு சிலர் கரு\த்து தெரிவிக்கின்றனர்.
எல்லா விதத்திலும் சகிப்புத் தன்மையுடன் செயல்படும் ஹிந்துக்களை இவ்வாறு தரக்குறைவாக விளம்பரங்களில் காட்டுவது மிகத் தவறு என்று விமர்சிக்கின்றனர் பலர்..
வீடியோவை இங்கே பாருங்கள்: