மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரங்கல் கூட்டத்தை படம் எடுக்க ஊடகத்துறையினருக்கு அனுமதி மறுப்பு…
மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதாவிற்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையில் பிற்பகல் 3.30 மணிக்கு நினைவஞ்சலி கூட்டம் நடத்த உயர்நீதிமன்ற வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வை செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்க படம் பிடிக்க அனுமதியில்லை. வளாகத்தின் உள்ளே பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உள்ளே செல்ல அனுமதி கொடுத்த நிலையில் வெளியில் நுழைவாயிலில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள மாநில காவல்துறையினர் உள்ளே செல்ல அனுமதி மறுத்து வருகின்றனர்.
உயர் நீதிமன்ற நிர்வாக பதிவாளர் கூறியும் உயர் நீதிமன்ற உதவி ஆய்வாளர், கட்டுப்பாட்டு அறையிலிருந்து அறிவுறுத்தல் வரவில்லை என காவலர்கள் அனுமதி மறுத்து வருகின்றனர்.
- மறைந்த தமிழக முதல்வருக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டத்தை படம் எடுக்க மாநில காவல்துறையே அனுமதி மறுப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



