பஸ்ஸில் வரம்பு மீறிய நடத்துனர்! ஓங்கி அறைந்து போலிஸ் ஸ்டேசனில் நிறுத்திய பெண்!

Published:

tamil selvi 1 - 2026

சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி. 28 வயதாகிறது. சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தில் சேவகியாக இருக்கிறார். இவர் நேற்றுமுன்தினம் இரவு கோயம்பேட்டிலிருந்து கும்பகோணம் வழியாக மன்னார்குடி நோக்கிச் சென்ற அரசு பஸ்ஸில் ஏறி உள்ளார்.

நடு இரவில் நன்றாக தூங்கி இருக்கிறார் அப்போது யாரோ தன்னை தொடுவதை உணர்ந்து., திடீரென தமிழ்செல்வி கண்விழித்து கொண்டார்.

அந்த பேரூந்தில் கண்டக்டர் ஆக இருக்கும் ராஜூ, பின் சீட்டில் உட்கார்ந்து கொண்டு, தமிழ்செல்வியின் மார்பை பிடித்துள்ளார். இதனால், கடும் ஆத்திரத்திற்கு உள்ளான தமிழ்செல்வி, கண்டக்டரின் கன்னத்தில் அறைந்திருக்கிறார். இதனால் மிகப்பெரிய பரபரப்பு அங்கு ஏற்பட்டது.

கும்பகோணம் பஸ் ஸ்டேண்டில் இறங்கிய தமிழ்ச்செல்வி கண்டக்டர் ராஜுவிடம் வாக்குவாதம் செய்தார். அதற்கு ராஜு, “உனக்கு வேணும்னா ஸ்டேஷனில் போய் புகார் தந்துக்கோ” என்று அலட்சியமாக பதில் சொல்லி உள்ளார்.

ஏனென்றால் ஆண்களுக்கு பெண்கள் இது மாதிரியான விஷயங்களை வெளியில் சொல்லமாட்டார்கள் என்றும் அப்படி சொன்னால் அவமானம் அவர்களுக்கு தான் என்றும் இந்த சமூகம் பெண்களை மட்டுமே இதில் அவமான சின்னமாகவும் பெண்களை இழிவாக நோக்கின்ற மனப்பான்மையுடனும் ஆதிகாலம் தொட்டு பார்த்து பழகி இருப்பதால் அந்த எத்தனப்பேச்சு பேசியுள்ளார் கண்டக்டர் ராஜூ.

tamil selvi - 2026

இதனால் மேலும் ஆத்திரமடைந்த தமிழ்ச்செல்வி பாலியல் தொல்லை கொடுத்ததாக ராஜு மீது மேற்கு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதை தொடர்ந்து செய்தியாளர்களிடமும் தமிழ்செல்வி பேசினார். அப்போது, “இப்படி பாலியல் தொல்லை அடிக்கடி நிறைய இடத்துல நடக்குது. ஆனால் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் பெண்கள் தைரியமாக வந்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும்” என்றார்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ராமநாதபுரத்தில் இதே போன்று ஓடும் பஸ்ஸில் பெண்களிடம் ராஜு ஏற்கனவே தவறாக நடந்து கொண்டு, அதற்காக சஸ்பெண்டும் செய்யப்பட்டாராம். அந்த சஸ்பெண்ட் முடிந்து இப்போதுதான் வேலைக்கு திரும்பி இருக்கிறார் ராஜு. திரும்பவும் அடுத்த புகார் கிளம்பி உள்ளது. இவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related articles

Recent articles

spot_img