
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.அவர் கூறுகையில்,நீட் தேர்வு ஆள்மாறாட்டம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்க விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.
இது போன்ற முறைகேட்டுக்கு பின்னால் கிரிமினல் கும்பல் உள்ளது. அவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் தேசிய அளவில் இந்த நடவடிக்கைகள் கண்டறியப்பட வேண்டும்.
இந்தி பேசும் மக்கள் மட்டும் இந்த நாட்டின் விடுதலைக்கு போரடவில்லை
அமித்ஷா அவர்களின் பேட்டியால் மோடி அவர்கள் தமிழ் மொழியின் சிறப்புகளை பேசுவதை ஏற்க முடியாது.
அதுமேலும் எச்சரிகையாக இருக்க வேண்டும் என்பதையே காட்டுகிறது.
இந்தியை மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழியாக்க நினைப்பது கண்டிக்கதக்கது.
கீழடியில் 3 கட்ட ஆய்வுகள் முடிவுற்று அறிக்கையை விரைவாக வெளியிட வேண்டும் என்பது பொதுமக்கள் கருத்து.
கீழடி அடையாளங்களை பாதுகாக்க தமிழகத்திலே அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.



