ட்யூசன் படிக்கும் மாணவியை காதலனுக்கு ‘அனுப்பி’ வைத்த பெண்! இருவர் கைது!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சென்னை
vankodumai 1 - 2026

சென்னையைச் சேர்ந்த சஞ்சனா என்ற பெண், அதே பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்ற நபரைக் காதலித்து வந்துள்ளார். இவர் தனது குடும்ப சூழ்நிலையின் காரணமாக 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வந்துள்ளார்.

பாலாஜியும் சஞ்சனாவும் வழக்கமாகத் தினமும் பேசிக் கொள்வர் என்று கூறப்படுகிறது. ஆனால், திடீரென பாலாஜி சஞ்சனாவுடன் பேச மறுத்துள்ளார். பாலாஜியின் மேல் பைத்தியமாக இருந்த சஞ்சனா ஏன் என்னுடன் பேசாமல் இருக்க? நான் ஏதாவது செய்து விட்டேனா? நீ மீண்டும் என்னுடன் பேச நான் செய்ய வேண்டும் என்று பாலாஜியிடம் கேட்டுள்ளார்.

அதற்கு பாலாஜி உன்னிடம் டியூஷன் படிக்கும் பெண்களூடன் நான் ஜாலியாக இருக்க நீ உதவ வேண்டும் என்று கூறியுள்ளார். பாலாஜியை தன்னுடன் பேச வைக்க எந்த எல்லைக்கும் போகத் துணிந்த சஞ்சனா, தன்னிடம் படிக்க வந்த மாணவிகளை பாலாஜியிடம் பழக வைக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

tution teacher - 2026

அதனால், தன்னிடம் படித்துக் கொண்டிருக்கும் மாணவியை வெளியே அழைத்துச் செல்வதாகக் கூட்டிக் கொண்டு போய் பாலாஜியிடம் ஒப்படைத்துள்ளார். அங்கு பாலாஜி அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அதுமட்டுமின்றி, அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவை எடுத்து இணையதளத்தில் போட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார். அதே போல, அங்குப் பயிலும் மாணவிகள் சிலரை ஆபாசப் படங்கள் எடுத்து மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.

அன்று சஞ்சனா வெளியே அழைத்து சென்று பாலாஜியிடம் விட்ட பெண்ணின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதனையடுத்து, காவல்துறையினர் பாலாஜி மற்றும் சஞ்சனாவை உடனடியாக கைது செய்து அவர்களின் மீது போக்சா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.