
தென்காசி புதிய மாவட்ட தொடக்க விழா வரும் நவம்பர் 22 ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது
திருநெல்வேலி மாவட்டத்தை பிரித்து புதிய மாவட்டமாக தென்காசி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான எல்லை வரையறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் உள்ள 10 சட்டசபை தொகுதிகளில் இரு மாவட்டங்களிலும் தலா ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா இரண்டு வருவாய் கோட்டங்களும் 8 தாலுகாக்கள் அமையும் வகையில் பிரிக்கப்பட்டுள்ளன.
தென்காசி மாவட்ட ஆட்சியராக அருண் சுந்தர் தயாளன் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பு அதிகாரியாக சுகுணா சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாவட்ட தொடக்க விழாவுக்காக நவம்பர் 21ம் தேதி தூத்துக்குடிக்கு வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 22ஆம் தேதி காலை 9 மணிக்கு தென்காசியில் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பள்ளி வளாகத்தில் மாவட்டத்திற்கான அடிக்கல் நாட்டி பேசுகிறார். இதில் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
புதிய ஆட்சியரகம், மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவை ஆயிரப்பேரி பகுதியில் அமைய உள்ளன. 37 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது!