
கிராமக் கோவில் பூசாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.
அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் கோவில்கள், ஒரு கால பூஜை திட்டம் உள்ள கோவில்களில் பணிபுரியும் பூசாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படவில்லை.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதை அடுத்து, கோவில் பூசாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாகக் கூறப் படுகிறது.
இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி உதவி ஆணையர்களுக்கு, அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார்