காலிக்குடங்களுடன் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

குடிநீர் பிரச்னையை தீர்க்க  வலியுறுத்தி காலிக்குடங்களுடன் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர். நெல்லை மாநகராட்சி பழைய பேட்டை நெல்லையாபுரம் தெருவில் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு வசிப்போர் பயன்பெறும் வகையில் வீட்டுக் குடிநீர் இணைப்பு, பொது குடிநீர் குழாய் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. பழையபேட்டையில் உள்ள நீரேற்றும் நிலையத்தில் இருந்து இப்பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யும் வகையில் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. குடிநீர் குழாய்களில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக இப்பகுதிக்கு குடிநீர் கிடைக்கவில்லையாம். இதையடுத்து இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் காலிக் குடங்களுடன் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது