வெள்ளத்தில் மூழ்கிய அடையாறு பாலம்; திருமுடிவாக்கம் சாலை துண்டிப்பு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
Screenshot 20191128 093428 WhatsApp2 - 2026

சென்னையில் கனமழை பெய்து வருகிறது பல இடங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது

சில இடங்களில் சாலைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன. சென்னை புறநகர் பகுதியான திருநீர்மலை பாலம் முற்றிலும் மூழ்கியுள்ளது. திருமுடிவாக்கம் செல்லும் சாலை இதனால் துண்டிக்கப்பட்டுள்ளது.

அடையாறு ஆற்றில் பெருக்கெடுத்து வரும் வெள்ளத்தால் திருநீர்மலை பாலம் மூழ்கியுள்ள தால் அந்தப் பகுதி மக்கள் அவுட்டர் ரிங்ரோடு சென்று வேறு வழியை தேர்வு செய்து அலுவலகம் செல்கின்றனர்.

இன்று கனமழை காரணமாக சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஏற்கனவே பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.