சென்னை:
முதல்வராக அதிமுக., பொதுச் செயலர் சசிகலா பதவி ஏற்பதற்கான முன்னேற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ள நிலையில், திடீரென உடல் நலக் குறைவு எனக் காரணம் காட்டி, சசிகலாவின் கணவர் நடராஜன், நேற்று இரவு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
நடராஜனுக்கு ரத்தக் கொதிப்பு இருப்பதாக தகவல்கள் வெளியிடப்பட்டன. இதனிடையே, அவர் ஏன் அப்பலோவில் அட்மிட் ஆனார் என்பதற்கு பல்வேறு யூகங்கள் உலா வந்தன. சசிகலாவின் குடும்பத்திற்குள் நடக்கும் தகராறு காரணமாக நடராஜன் மருத்துவமனையில் போய் படுத்துக் கொண்டார் என்று கூறப்பட்டது.
ஆனால் இன்று அப்பல்லோவில் நடத்தப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்புக்குப் பின்னர், இந்த பிரஸ் மீட்டில் என்ன பேச வேண்டும் என்று டாக்டர்களுக்கு நடராஜன்தான் கதை தயாரித்து கொடுக்க வாய்ப்புள்ளதாக திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் தனது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளார். இந்த பிரஸ் மீட், அரசால் நடத்தப் படுவதுதானே தவிர, அப்பல்லோவால் இல்லை என்று, லண்டன் மருத்துவர் பீலே வேறு கூறியதால், இந்த சந்தேகம் வலுப்பெற்றுள்ளது.
இது குறித்து அன்பழகன் தனது டிவிட்டில்,
படத்தின் பெயர்:-
“அப்போலோ Press Meet”
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் :- “நடராஜன்”
ஹீரோ : Apollo
வில்லன் : Richard Beale.
– என்று கூறி, சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளார்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – நடராஜன்.
நான் அப்பவே சொல்ல…! https://t.co/YoALCyL8bG
— J Anbazhagan (@JAnbazhagan) February 6, 2017
படத்தின் பெயர்:-
“அப்போலோ Press Meet”கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் :- “நடராஜன்”
ஹீரோ : Apollo
வில்லன் : Richard Beale.— J Anbazhagan (@JAnbazhagan) February 6, 2017




