இந்துமுன்னணி சுரேஷ் குமார் கொலையில் … தலைமறைவான 3 பேர் குறித்து துப்பு கொடுத்தால் பரிசு!

Published:

tamilnadu police - 2026

ஹிந்து முன்னணி திருவள்ளூர் மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது

சென்னை அம்பத்தூரை அடுத்த மண்ணூர்பேட்டை சேர்ந்தவர் சுரேஷ்குமார் திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவராக இருந்தார். இவரை கடந்த 2014 ஆகஸ்ட் மாதம் சிலர் கொலை செய்தனர்.

சென்னை பாடி பகுதியைச் சேர்ந்த நசீர், கடலூர் காஜாமைதீன் உள்ளிட்ட 13 பேரை இந்த கொலை தொடர்பாக போலீசார் கைது செய்தனர்.

இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த செய்யது அலி நவாஸ் (25 வயது) அப்துல் சலீம் (25 வயது) காஜாமைதீன் (47 வயது) ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர்.

இவர்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்; அவர்கள் குறித்து ரகசியம் காக்கப்படும் என்று சென்னை மாநகர போலீசார் நேற்று அறிவிப்பு வெளியிட்டனர்.

ALSO READ:  பழனி கோயில் நில விவகாரத்தில் கைதானவர் மரணம்; சந்தேகம் எழுவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு!

திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ் குமார் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த சையது அலி நவாஸ், அப்துல் சமீம், காஜாமொய்தீன் ஆகியோர் தலைமறைவு – காவல்துறை

தலைமறைவாகி உள்ள 3 பேர் குறித்து தகவல் தெரிவித்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என அம்பத்தூர் எஸ்டேட் போலீசார் அறிவிப்பு.

அரபு நாடுகளில் வாரம் ஒரு முறை தொலைதொடர்புதுறையில் இருந்து அனைத்து தொலைபேசி வாடிக்கையாளர் கைபேசிக்கும் தீவிரவாதிகள் உங்கள் அருகாமையில் கூட இருக்கலாம் சந்தேகப்படும்படியாக யாராவது இருந்தால் உடனே இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் என ஒரு டோல்ஃபிரி எண்ணையும் இணைத்து குறுஞ்செய்தி அனுப்புகின்றார்கள்..

ஆனால் இங்கே கொலையாளிகளை பிடித்தும் அவர்களுக்கு ஜாமின் வழங்கி தப்ப விட்டு இப்போ மக்களிடம் உதவி கேட்டு நிற்கும் நீதித்துறையையும், காவல்துறையையும் என்னத்த சொல்ல..

Related articles

Recent articles

spot_img