மோடிக்கு மனவலிமை நல்கிட… ராஜராஜ சோழனிடம் பிரார்த்தனை!

உள்ளூர் செய்திகள் திருச்சி லைஃப் ஸ்டைல்
rajarajacholan sadhaya nakchatra fun - 2026

உடையாளூரில் ஸ்ரீராஜராஜ சோழன் நினைவு திருக்கோயிலில் மார்கழி மாத சதயநட்சத்திர பெருவிழா நடத்தப் பட்டது.

செவ்வாய்க்கிழமை கும்பகோணம் அருகில் உள்ள உடையாளூரில் மாமன்னர் ஸ்ரீராஜராஜ சோழன் நினைவு திருக்கோயிலில் மார்கழி மாத சதய நட்சத்திர பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு வகையான அபிஷேகங்கள், திருமுறை பாராயணம், கூட்டு வழிபாடு என சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவில் ஸ்ரீராஜராஜசோழன் பக்தர்கள் பேரவை அமைப்பாளர் கும்பகோணம் பாலு, இந்து தமிழர் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் பட்டுக்கோட்டை சன் சிவா, கும்பகோணம் நாகராஜ், சங்கர் தர்மராஜ், “டெல்டா சிங்கம்” கும்பகோணம் மணிகண்டன், பட்டீஸ்வரம் பாலு உள்ளிட்ட பொறுப்பாளர்கள் சிவனடியார்கள் கலந்து கொண்டார்கள்.

rajarajacholan1 - 2026

*பாரத அரசு கொண்டு வந்த தேசிய குடியுரிமை பதிவேடு சட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்து பிரார்த்திக்கப்பட்டது.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு நீண்ட ஆயுள் ஆரோக்கியமும், எதிரிகளை வெல்லக்கூடிய மனோவலிமை, வாக்குவன்மை தந்திட ஸ்ரீராஜராஜ சோழ மன்னரிடம் பிரார்த்தனை செய்யப்பட்டது.

ALSO READ:  வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

மத்திய அரசு உடையாளூர் ஸ்ரீராஜராஜசோழன் நினைவு திருக்கோயில் கட்டுவதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென விண்ணப்பம் செய்யப்பட்டது.

அடிமை மோகம் அகன்று, அன்னை பாரத நாட்டு மக்கள் உடலாலும் உள்ளத்தாலும் பாரதீயர்களாக வாழ வேண்டுமென பிரார்த்திக்கb பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.