ஆடைக்கு வந்த ஆபத்து! அச்சத்தில் பெண்கள்!

Published:

ladeis dress - 2026

சென்னை கிண்டி அடுத்துள்ள ஆதம்பாக்கம் நியூ காலனியில் உள்ள தனியார் குடியிருப்பு ஒன்று உள்ளது.

சமீபத்தில் இங்கு உள்ள வீடுகளின் ஜன்னல் கதவுகள் திறக்கப்பட்ட நிலையில் சில பொருட்கள் மற்றும் பெண்களின் ஆடைகள் திருடு போயிருந்தது தெரியவந்தது. ஒரே மாதிரி பல வீடுகளில் திருடு போயிருப்பதால் குடியிருப்பு வாசிகள் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

syko - 2026

அதில் அதிகாலை 3.30 மணியளவில் குடியிருப்புக்குள் மேலாடையின்றி நுழைந்த மர்ம நபர் ஒருவர், குடியிருப்பில் ஜன்னல்களைத் திறந்து பார்த்தது தெரியவந்தது. இதுகுறித்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வரும் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பெண்களின் ஆடைகளை மட்டும் திருடும் சைக்கோ யார்? எதற்காக ஆடைகளை திருடுகிறார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!

Related articles

Recent articles

spot_img