பாரத ரத்னா விருது ஜெ. க்கு வழங்க கோரிக்கை! துணை சபாநாயகர்!

Published:

pollachi jayaraman - 2026

தமிழக சட்டப்பேரவை 2-ம் நாளாக இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. துணை சபாநாயகர் ஜெயராமன் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என சட்டசபையில் கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை 2-ம் நாளாக இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டம் தொடங்கியதும் சபாநாயகர் தனபால் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நல்லப்பன், வடிவேலு, கே.கே.சின்னப்பன், சு.சுப்பிரமணியன், கே.வி.முரளிதரன், அழகராஜன், நாராயணன், வ.மு.சுப்பிரமணியன், வை.பாலசுந்தரம், டாக்டர் தேவராஜன், சக்திவேல் முருகன், ஜெனிபர் சந்திரன், எஸ்.ஏ.எம்.உசைன், ஆகியோர் மறைந்த செய்தியை பேரவையில் அறிவித்தார்.

பின்னர் அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் சட்டசபை உறுப்பினர்கள் சிறிது நேரம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

அதைதொடர்ந்து முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் மறைவு குறித்து இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில் இன்று பேசிய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என சட்டசபையில் கோரிக்கை வைத்துள்ளார்.

ALSO READ:  தொடரும் தெய்வத்திருமேனிகள் திருட்டு; இந்து முன்னணி கண்டனம்!

Related articles

Recent articles

spot_img