அன்னவாசல் அருகே மயில்கறி, நாட்டுத் துப்பாக்கியுடன் 3 பேர் கைது!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் திருச்சி லைஃப் ஸ்டைல்
annavasal mayilkari - 2026

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் போலீஸார் வயலோகம் பகுதியில் திங்கள்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே மூன்று பேருடன் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.

அதில் ஒரு சாக்குப் பையில் ரோமம் பிடுங்கப்பட்டு இறந்த நிலையில் மறைத்து வைக்கப் பட்டிருந்த 3 மயில்கள் மற்றும் ஒரு நாட்டுத் துப்பாக்கி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீஸார், அந்த மூன்று பேரையும் அன்னவாசல் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

அதில் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகேயுள்ள நகரப்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் (26), பெருமாள் (25), மூர்த்தி (26) என்று தெரியவந்து.

இதைத் தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த போலீஸார் மயில் வேட்டைக்குப் பயன்படுத்திய ஒரு நாட்டுத் துப்பாக்கி, கைப்பேசி மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இது குறித்து வழக்குப் பதிந்த அன்னவாசல் போலீஸார், மயிலை உணவுக்காக வேட்டையாடினார்களா அல்லது மருத்துவத்துக்காவா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.