இப்படித்தான் இஸ்லாமியர்கள் திமுக., காங்கிரஸால் விலைக்கு வாங்கப் படுகிறார்கள் #ஆதாரத்துடன்_வீடியோ என்று சமூகத் தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
இந்திய இறையாண்மைக்கு எதிராக குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடத் தூண்டிவிட, இந்திய இஸ்லாமிய இளைஞர்களை #செந்தில்பாலாஜி #ஜோதிமணியிடம் கரூர் பள்ளப்பட்டியை சேர்ந்த #தோட்டம்_அபுதாகிர் பேரம் பேசி விற்பனை செய்தார்… என்ற தகவலுடன் வைரலாகும் அந்த வீடியோவில், யாரோ ரகசியமாக மொபைல் போனில் பதிவு செய்வது போன்ற தோற்றத்துடன் வீடியோ பதிவாகியுள்ளது.
இஸ்லாமிய இளைஞர்களை வரிசையில் நிற்க வைத்து வழக்கம்போல ஆடுகளை விலைக்கு விற்பனை செய்வதைப் போல செய்தார்கள்,. திடீர் திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி, கரூர் காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி ஆகியோர், இஸ்லாமிய இளைஞர்களுக்கு பணம் கொடுத்து விலைக்கு வாங்கும் காட்சி என்று கூறி, தற்போது இணையதளங்களில் இது வைரல் ஆகி வருகிறது.
அந்த வீடியோ…
சிஏஏ போராட்டம் என்ற பெயரில் பணம் கொடுத்து தூண்டிவிடப் பட்ட போராட்டம் என்பது குறித்து கருத்து தெரிவிக்கும் பலரும், எதிர்க் கட்சிகளின் வேலையே இதுதான்! நாடு முழுவதும் காங்கிரஸ் இதைச் செய்கிறது! தமிழகத்தில் திமுக., இந்த வேலையைத்தான் பலமாகச் செய்து வருகிறது என்கிறார்கள்.
ஒரு கோடி கையெழுத்து என்ன… பத்து கோடி கையெழுத்து கூட தமிழகத்தில் திமுக.,வால் வாங்க முடியும். தமிழகத்தின் மக்கள் தொகையை விட அதிகமாக! காரணம், கருவில் இருக்கும் குழந்தை கூட திமுக.,வுக்காக கையெழுத்து போட்டுவிட்டு, தாயின் கருவறைக்குள் புகுந்துவிடும் என்பது தான் ஹைலைட்டான் கமெண்ட்!