
திருப்பூர், மங்கலத்தில் நேற்று நடந்த குடியுரிமை சட்ட திருத்த விளக்க பொதுக்கூட்டத்திற்கு சென்ற பொது மக்களை இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளை சார்ந்தவர்கள் வழிமறித்து தாக்கியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஜனநாயக நாட்டில் நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட சட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களின் குரல்வளையை நெறிக்கும் மத அடிப்படைவாதிகளை தமிழக காவல் துறை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் இப்போது வலுவாகியிருக்கின்றனர்.
இந்த நிலையில் மாவட்ட ஆட்சியருடன் இதில் சம்பந்தப் பட்டவர்கள் நடவடிக்கை எடுக்கக் கோரி பேச்சு வார்த்தை நடத்தினர். இந்தக் கூட்டத்துக்குப் பின்னர், மார்ச் 10 செவ்வாய்க்கிழமை நாளை காலை 8 மணிக்கு மங்கலம் நால்ரோடு அருகில் உள்ள பெருமாள் கோவில் அருகில் தொடர் போராட்டம் நடத்தப் பட வுள்ளது என்று பொறுப்பாளர்கள் கூறினர்.

இன்று மாலைக்குள் தொடர் போராட்டத்தை நிறுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வில்லை என்றால், காலை 8 மணி முதல் மங்கலம் நால் ரோடு பெருமாள் கோயில் முன் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகக் கூறியுள்ளனர்.
முன்னதாக, குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவு விழிப்புணர்வு பொதுக்கூட்டம் இந்து மக்கள் கூட்டமைப்பு சார்பில் சோமனூரை அடுத்த மங்கலத்தில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திருப்பூர் மேற்கு ரோட்டரி சங்க தலைவர் நடராஜமூர்த்தி வரவேற்றார். இந்து மக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் பாலசுப்பிரமணியம் பழனிசாமி அமிர்தம் ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் இந்து கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மக்களின் ஒற்றுமையை குலைக்கும் சக்திகளை நாட்டை விட்டு விரட்ட வேண்டும். இந்து மக்கள் ஒற்றுமை என்பது பாரதத்தின் இரும்புக் கோட்டையாக உள்ளது. இந்துக்களின் சகோதரர்கள் கிறிஸ்துவர் மற்றும் இஸ்லாமியர்கள்! இந்து-முஸ்லிம் ஒற்றுமையை குலைக்கும் வகையில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் சிலர் பேசுவது மிகவும் வேதனையாக உள்ளது!
வந்தாரை வாழவைக்கும் நாடு நம் பாரத நாடு! மதம் மற்றும் சாதி இன்று அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் வாழ்ந்து வருவது பாரத தேசத்தின் தனிச்சிறப்பாக உள்ளது. இந்த ஒற்றுமையை குலைக்கும் சக்திகள் ஒழிந்து போக வேண்டும் என்று அவர் பேசினார். இதில் விவசாயிகள் சங்க நிர்வாகி ஈஸ்வரன், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத் தலைவர் சண்முகம், ஆன்மிக சொற்பொழிவாளர் ஆனந்தகிருஷ்ணன், மத்திய அரசு வழக்கறிஞர் சுப்பிரமணியம், தமிழக பாண்டிச்சேரியின் முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் தலைவர் பாத்திமா, தமிழ் நாடு ஏகத்துவ பிரச்சார வேலூர் இப்ராஹிம், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
காடேஸ்வரா சுப்பிரமணியம் தனது பேச்சின் போது, தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் இந்து மக்கள் கூட்டமைப்பு உருவாக்க வேண்டும். ஊரைப் பாதுகாக்க வீட்டிற்கு ஒருவர் உறுப்பினராக வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.
ஒருபுறம் கூட்டத்தில் இந்து முஸ்லிம் ஒற்றுமை, இந்துக்கள் கிறிஸ்துவர்கள் முஸ்லிம்கள் இணைந்து ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்றெல்லாம் சுவாமிகள் உள்ளிட்ட சிலர் பேசிய அதே வேளையில், முஸ்லிம்கள் அங்கே பிரச்னைகளை கொடுத்துக் கொண்டிருந்தனர். போலீஸாராலும் அவர்களைக் கட்டுப்படுத்தவோ, அப்புறப் படுத்தவோ முடியவில்லை.

அங்கே நடந்தவை குறித்து இந்து முன்னணிப் பிரமுகர்கள் சிலர் தெரிவித்தவை….
திருப்பூர் அருகே உள்ள இந்த மங்கலம் பகுதியில் இஸ்லாமியர்களும் இந்துக்களும் சரிசமமாக வசிக்கின்றனர். மங்கலத்தை சுற்றியுள்ள கிராமங்களில் இந்துக்களே பெரும்பான்மையாக வசிக்கின்றனர் .
இந்நிலையில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் என்ற பெயரில் தினம் தோறும் சாலைகளை மறிப்பது, இந்துக்களை தாக்குவது, பெண்களை சீண்டுவது, இந்துக் கடவுள்களை இழிவுபடுத்திப் பேசுவது என இஸ்லாமியர்களின் அராஜகம் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்து வந்தது. இதற்கு முடிவு கட்ட ஒட்டுமொத்த கிராம மக்களும் ஒன்று சேர்ந்து இந்து மக்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கி இந்த அராஜகத்திற்கு எதிராக பெரும் பொதுக்கூட்டம் நடத்துவது என முடிவு செய்தனர்.
அந்தப் பொதுக்கூட்டம் நேற்று மாலை தொடங்கி நடைபெற்றது. இந்நிலையில் இந்தக் கூட்டத்தையும், இந்துக்கள் கூடுவதையும் விரும்பாத இஸ்லாமியர்கள், நேற்று காலையில் இருந்தே அராஜகம் செய்யத் தொடங்கினர்.
இந்த நிகழ்ச்சிக்காக தேசியக்கொடி கட்டப்பட்டிருந்தது. அதைக் கழற்ற வேண்டும் என முஸ்லிம்கள் அராஜகம் செய்தனர் . இதை அடுத்து அவர்களின் கும்பல் மிரட்டலுக்கு பயந்து போலீஸார் தேசியக் கொடிகளைக் கழற்ற வலியுறுத்தினர். இதை அடுத்து, மூன்று சாலைகளில் இருந்த தேசியக்கொடிகள் கழற்றப் பட்டன.
பொதுக்கூட்டத்துக்கு வரும் சாலைகள் மொத்தம் நான்கு ஒன்று அவிநாசி வழியாக வரும் சாலை, இரண்டு திருப்பூரில் இருந்து வரும் சாலை, மூன்று பல்லடத்தில் இருந்து வரும் சாலை, நான்கு சாமளாபுரத்திலிருந்து வரும் சாலை. அவிநாசி சாலையைத் தவிர மற்ற மூன்று சாலைகளையும்
முஸ்லிம்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டனர். பொதுக்கூட்டத்துக்கு வருபவர்களை மறிப்பதும் தாக்குவதும் ஆங்காங்கே அரங்கேறின.
தகவல் அறிந்து போலீசார் செல்வதும் அவர்களை கலைப்பதும் என்ற சூழ்நிலை பொதுக்கூட்டம் முடியும்வரை தொடர்ந்தது. பொதுக் கூட்டத்திற்கு வந்த பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் என பலரும் இந்த முஸ்லிம்களின் தாக்குதலுக்கு இலக்காகினர். பொதுக் கூட்டம் முடிந்து பொதுமக்கள் தங்களுடைய வீடுகளுக்கு திரும்பும்போது 3 சாலைகளை முஸ்லிம்கள் ரோட்டில் வந்து அமர்ந்து பாதையை மறித்துக் கொண்டனர்.
இதனால் தங்களுடைய வீடுகளுக்கு திரும்ப முடியாமல் பெண்களும் குழந்தைகளும் முதியவர்களும் சாலையில் உட்கார்ந்து மறியலில் ஈடுபடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.
கடைசி வரை திருப்பூர் மெயின் சாலையை மறித்து தகராறில் ஈடுபட்ட முஸ்லிம்களை போலீசாரால் அப்புறப் படுத்தவே முடியவில்லை. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தால் அந்தப் பகுதி ஒரு பாகிஸ்தானாக மாறுகிறது என்பதற்கு மங்கலம் சம்பவம் ஓர் உதாரணமாக அமைந்து விட்டது. .. என்கின்றனர்.
இந்நிலையில் நாளை முதல் இந்து மக்கள் கூட்டமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகக் கூறியுள்ளதால், அங்கே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.