அடிமைப் பிழைப்பு பிழைத்துப் பழகியவர்கள்!

bharathamatha - 2026

மூன்று மாநிலங்களில் பாஜகாவிற்கு வாக்களிக்காமல் நாம் மோதியின் பெருமையைத் தகர்த்து விட்டோம். ஏதோ முதல்முறையாக நாம் இதைச் செய்கிறோம் என்று எண்ண வேண்டாம், இதைப் போலவே முன்புமே கூட நாம் மிகப்பெரிய மனிதர்களின் பெருமையைப் பொடித்திருக்கிறோம்…..

மிகவும் முன்பாக சிந்த் நாட்டின் ஹிந்து அரசனான தாஹிரின் பெருமையை அப்போதைய ஆஃப்கானிஸ்தான் மற்றும் ராஜஸ்தானத்தின் ஹிந்து அரசர்கள் மண்ணோடு மண்ணாகத் தேய்த்தார்கள். தாஹிர் என்னவோ உதவிகோரிக் கடிதங்களை எழுதினார், ஆனால் யாருமே கைகொடுக்க வரவில்லை. தனது பராக்கிரமம் மீது தாஹிருக்கு மிகுந்த பெருமை இருந்தது, கொல்லப்பட்டார். ஆனால் இதன் பிறகு சிந்த் நாட்டில் ஹிந்துக்களின் தொடர் வீழ்ச்சி தொடங்கியது, இன்று ஆஃப்கனிஸ்தான் முழுமையாக முஸ்லீம் தேசமாக மாறி விட்டது.

இதைப் போலவே நாம் முகம்மது கோரி படைதொடுத்த வேளையில் ப்ருத்விராஜ் சௌஹானுக்குத் துணை புரியாமல் அவருடைய பெருமையை மண்ணில் புதைத்தார்கள். ஆனால் அதே முகம்மது பிறகு ஜயசந்தையும் நாயை விடக் கேவலமாக நடத்திக் கொன்றான்.

ALSO READ:  ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

மேவார் ராஜ்ஜியத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தங்கள் வீரத்தின் மீது பெருமிதம் இருந்தது. ஆனால் கில்ஜி மேவார் ராஜ்ஜியத்தைச் சுற்றி வளைத்த போது ஒட்டுமொத்த ராஜ்புதானாவைச் சேர்ந்த யாருமே துணை நிற்கவில்லை, ராவல் ரத்தன் துரோகத்துக்கு இரையானார், பத்மாவதி 16000 பெண்களோடு தீக்குண்டத்தில் மரித்தார். தனது அழகின் மீது பத்மாவதி கொண்ட பெருமிதம் தகர்க்கப்பட்டது.

ராணா சாங்கா, லோதியைக் கைது செய்த பின்னர், அவருடைய பெருமையைத் தகர்க்க, கொள்ளையனான பாபர் வரவழைக்கப்பட்டான். போரில் யாருமே ராணா சாங்காவுக்குத் துணை வரவில்லை, அவரது தளபதி 30000 போர்வீரர்களோடு உயிரிழந்தார், சாங்காவின் பெருமிதம் தவிடுபொடியானது. ஆனால் லோதிக்களும் பின்னர் முகலாயர்களுக்கு அடிமைத் தொழில் செய்ய வேண்டியிருந்தது. கோயில்கள் தகர்க்கப்பட்டன, முகலாயர்களால் பெண்களின் கற்பு சூறையாடப்பட்டது, ஆனால் ராணா சாங்காவின் பெருமிதம் தரைமட்டமாக்கப்பட்டது.

மராட்டியர்கள் பெரும் பராக்கிரமம் படைத்தவர்கள், முகலாயர்களுக்குத் தண்ணீர் காட்டியவர்கள். அவர்களிடமும் மிகுந்த பெருமிதம் குடிகொண்டிருந்தது. முகலாயர்கள் தோற்றதால், காஃபிர்களை ஒடுக்க ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த அப்தாலீ வரவழைக்கப்பட்டான், பானிபட்டின் களத்திலே சேனைகள் மோதின. படுபயங்கரமான குருதி வெள்ளம் பெருக்கெடுத்தோடியது, பெரும்பராக்கிரமத்தை மராட்டியர்கள் வெளிப்படுத்தினார்கள்.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

அப்தாலியின் படைக்கு உணவும் தளவாடங்களும் இடையறாமல் கிடைத்து வந்தன ஆனால், மராட்டியர்களுக்கு ராஜஸ்தானைச் சேர்ந்த அரசர்கள் யாரும் அல்லது பஞ்சாபைச் சேர்ந்த சீக்கியர்கள் யாரும் உதவியோ, உணவோ, தளவாடங்களோ அனுப்பி உதவவில்லை. மராட்டிய பேஷ்வாக்களின் பெருமிதத்தைத் தகர்க்க வேண்டுமில்லையா? பட்டினி ஒருபுறம், அப்தாலியின் காட்டுமிராண்டி சேனை மறுபுறம் என இருபுறத் தாக்குதலை எதிர்கொண்டார்கள் மராட்டியர்கள். இறந்து கொண்டே இருந்தார்கள், தோல்வியைத் தழுவினார்கள். உயிர்த்தியாகம் செய்யாத இல்லம் என்ற ஒன்று அன்றைய மஹாராஷ்ட்ரத்தில் இல்லவே இல்லை, ஆனால் பெருமிதம் பொடிந்தது இல்லையா?

எண்ணற்ற முறைகள் நாம் நம்மவர்களுக்குத் துணை நிற்காமல், நம்மவர்களுடைய பெருமிதத்தைத் தரைமட்டமாக்கியிருக்கிறோம், நாம் மோதியையும் கூட ஆட்சிப்பீடத்திலிருந்து அகற்றியே தீருவோம், சரிதானே!!

இதனைச் செய்ய நாம் கோரிக்கள், முகலாயர்கள், அப்தாலிக்கள், அல்லது இத்தாலி, பாகிஸ்தானம் என யாருடைய உதவியை நாட வேண்டியிருந்தாலும், நாட்டை அவர்களிடம் அடகு வைக்க வேண்டியிருந்தாலும், நாம் மோதியின் பெருமிதத்தை தவிடுபொடியாக்கியே தீருவோம், சரியா??

ஏனென்றால், அடிமைகளாக வாழ்ந்து பழகி விட்டோமில்லையா, அதான்!!
(வாட்ஸப்பில் வந்த வெட்கப்பட வைக்கும் கருத்து)

  • மொழியாக்கம்: சக்கரத்தாழ்வார்.
ALSO READ:  அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories