பெங்களூரு: போலி வாக்காளர் அடையாள அட்டைகள் பத்தாயிரத்துக்கும் மேல் கண்டெடுக்கப் பட்ட பெங்களூரு ராஜ ராஜேஸ்வரி நகர் தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அங்கு மே 28 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு ராஜ ராஜேஸ்வரி நகரில் உள்ள ஒரு வீட்டில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் பறக்கும் படையினரால் கண்டெடுக்கப் பட்டன. இது குறித்து விசாரணை நடத்தப் பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பில், காங்கிரஸ் எம்.எல்.ஏ., உள்ளிட்ட காங்கிரஸார் 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.
இந்நிலையில், ராஜராஜேஸ்வரி நகரில் நாளை நடைபெறும் வாக்குப் பதிவை ஒத்தி வைக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் பலவும் வற்புறுத்திய நிலையில், தேர்தல் ஆணையம் அதனை ஏற்றுக் கொண்டு வாக்குப் பதிவு நாளை வரும் 28 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது. எனவே ராஜராஜேஸ்வரி தொகுதில் வரும் 28ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். அன்று பதிவாகும் வாக்குகள் மே 31 அன்று எண்ணப்படும்.




