3 பேர் குடும்பம்; அனைவரும் மதமாற்றி… மர்ம மரணம்: சொத்தை அபகரிக்க முயன்ற பாதிரியார்!

Published:

cross blood stained1 - 2026

ஒரு குடும்பமே மர்மமாக உயிரிழந்த நிலையில், அவர்களின் சொத்தை அபகரிக்க முயன்றதாக பாதிரியார் உட்பட மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் ரெட்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி (68). இவரது சித்தி ராசம்மாள் (80); மகள் பாப்பாயி (40); மகன் நல்லுசாமி (30). இவர்கள் சில ஆண்டுகளுக்கு முன் கரூர் ஆண்டாங்கோவிலில் உள்ள லீபனோன் ஆப் கார்டு சர்ச் மூலம் கிறிஸ்துவ மதத்துக்கு மாறியுள்ளனர்.

இந்நிலையில் ராசம்மாள், பாப்பாயி, நல்லுசாமி ஆகியோர் கடந்த நான்கு ஆண்டுகளில் அடுத்தடுத்து உடல்நலக் குறைவால் இறந்துள்ளனர். ஆனால் இவர்கள் இறந்த விவரம் குறித்து உறவினர்களுக்குக் கூட தெரிவிக்காமல் சர்ச் பாதிரியார் மோசஸ் துரைக்கண்ணு (60), அவரது மகன் சாம் மங்களராஜ்(40), நண்பர் ராஜ்குமார்(40) ஆகியோர் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்துள்ளனர்.

அடுத்து, ராசம்மாள் பெயரில் உள்ள சொத்துகளை பாதிரியார் உள்ளிட்டோர் அபகரித்துக் கொண்டுள்ளனர். இது குறித்து, கரூர் எஸ்.பி., அலுவலகத்தில் கந்தசாமி புகார் செய்தார். இதை அடுத்து அவர்கள் மூவர் மீதும் கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிறிஸ்துவர்களாக மதம் மாற்றி, குடும்பத்தினர் அனைவரும் உயிரிழந்த நிலையில், அவர்களின் உறவினர்களுக்குக் கூடத் தெரியாமல், அவர்களை அடக்கம் செய்து, சொத்துகளை பாதிரியார் அபகரித்த செயல் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

காஸ்மிக்பிளின்கர் @cosmicblinker 3 பேர் குடும்பம், வயது 30,40, 80 அனைவரையும் மதமாற்றம்
3 பேரும் 4 வருடங்களில் இறப்பு! உறவினருக்கு தெரிவிக்காமல் பாதிரியால் அடக்கம்
3 பேர் குடும்ப சொத்தை பாதிரி கூட்டம் ஆட்டையை போட்டதாக போலீசில் புகார்
meaning of என் சமூகம் உனக்கு முன்னால் செல்லும்?

Related articles

Recent articles

spot_img